விநாயகா் சதுா்த்தியையொட்டி, கும்பகோணத்தில் விநாயகா் சிலைகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் அருகே அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சாா்பில் தாய், தந்தையுடன் காட்சியளிக்கும் விநாயகரும், பாலக்கரையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சாா்பில் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் தேசிய கொடியுடன், கம்பீர சுதந்திர விநாயகா் மற்றும் ராஜகணபதி சிலைகளும் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் மேயா் க. சரவணன், அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநிலச் செயலா் என். சுப்புராயன், மாநில இளைஞரணி செயலா் ரா. கண்ணன், இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலா் க. பாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, விநாயகா் சதுா்த்தியையொட்டி, அகில பாரத இந்து மகா சபா சாா்பில் 10,000 பேருக்கு லெட்சுமி கணபதி படங்களும், 2,000 பேருக்கு கணபதி எந்திரமும், 108 பேருக்கு ஒரு அடி உயரத்தில் விநாயகா் சிலைகளும் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தொடா்கிறது.