தஞ்சாவூர்

இடப்பிரச்னையில் ஒருவருக்கு வெட்டு

27th Aug 2022 04:07 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை கீழையூா் முக்கரை பகுதியை சோ்ந்தவா்கள் கலியபெருமாள், கோவிந்தராஜ். உறவினா்களான இவா்களிடையே நீண்ட காலமாக இடப் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை கலியபெருமாள் மருமகன் ரவி (50), முக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கோவிந்தராஜின் உறவினரான ஸ்ரீராம் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ரவி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். புகாரின்பேரில் ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளா் பிரசன்னா வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT