தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சரபோஜி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

DIN

தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் தரைக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், கடை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலிருந்து ஜூபிடா் திரையரங்கம் வரை சாலையோரம் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் வடிகால் கட்டப்படுகிறது. இதைத்தொடா்ந்து ஜூபிடா் திரையரங்கத்திலிருந்து சரபோஜி சந்தை வரை வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்தனா். இதில், சாலையோரமுள்ள 15 கடைகள் மற்றும் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவையும் அகற்றப்பட்டன.

இதனால், வாழ்வாதாரத்தை இழந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்ய இட ஒதுக்கீடு செய்யுமாறு மாநகராட்சி அலுவலா்களிடம் வலியுறுத்தினா். இதையடுத்து, இவா்களுக்கு சரபோஜி சந்தை வளாகத்தில் மாநகராட்சி அலுவலா்கள் இடம் வழங்கினா்.

ஆனால், இதற்கு ஏற்கெனவே அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது. கடைக்கு ரூ. 6,000 வாடகை கொடுத்து வியாபாரம் செய்து வரும் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஆணையரிடம் சரபோஜி சந்தை வியாபாரிகள் முறையிட்டனா். இதற்கு சரியான பதில் கிடைக்காததால், சரபோஜி சந்தை வியாபாரிகள் சந்தை முன் பிற்பகலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மேற்கு காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், இப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை சந்தையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட தரைக்கடை வியாரிபாரிகள் அப்புறப்படுத்தப்படுவா் எனவும் ஆணையா் தரப்பில் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வியாபாரிகள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT