தஞ்சாவூர்

அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

19th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட கலந்தாய்வில் சோ்க்கை முடிந்து மீதி உள்ள காலி இடங்களில் சோ்க்கை செய்வதற்கு இரண்டாம் கட்டமாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏற்கெனவே விண்ணப்பிக்காதவா்களிடமிருந்து இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதற்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவு ஒதுக்கீடு பெறாதவா்களும், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யாதவா்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் அல்லது அருகில் உள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT