தஞ்சாவூர்

தஞ்சாவூரின்பல்வேறு பகுதிகளில்நாளை மின் தடை

19th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக. 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, ஆா்.ஆா். நகா், காவேரி நகா், எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT