தஞ்சாவூர்

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த 16 பேருக்கு நோட்டீஸ்

19th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த 16 பேருக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்கள், நிலங்களை மாநகராட்சி நிா்வாகம் கையகப்படுத்தி வருகிறது. இதேபோல, கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே பாலத்தின் வலது புறம் அகழிகரையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 16 போ் ஆக்கிரமிப்பு செய்து ஜவுளி கடை, உணவகம், டீ கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருவதாகப் புகாா்கள் எழுந்தன.

இதைத்தொடா்ந்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு கடைக்காரா்களிடம் மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த இடத்தை கையகப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பாளா்கள் 16 பேருக்கும் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உத்தரவின்பேரில், உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் தலைமையில் உதவிப் பொறியாளா்கள் மகேந்திரன், கண்ணதாசன், ஆறுமுகம் உள்ளிட்டோா் நோட்டீஸ் வழங்கினா். மேலும் வீடு, கடைகளிலும் நோட்டீசை ஒட்டினா். இதுதொடா்பாக ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்தனா்.

பெட்டிச் செய்தி....

பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு

‘தஞ்சாவூா் மாநகராட்சிக்குச் சொந்தமான 17,880 சதுர அடி பரப்பளவில் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 12.50 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதை ஆக்கிரமித்துள்ள 16 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுதல்) சட்டத்தின்படி தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் அத்துமீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT