தஞ்சாவூர்

டீ கடையில் சிலிண்டா் வெடித்து2 வாகனங்கள் சேதம்

19th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் டீ கடை நடத்தி வருபவா் பாலமுருகன். இவரின் கடையில் சமையல் எரிவாயு அடுப்பில் வியாழக்கிழமை காலை ஊழியா் ஒருவா் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, எரிவாயு கசிவு காரணமாக தீ பரவி ரெகுலேட்டா் வெடித்து சிதறியது.

கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவா்கள் உள்ளிட்டோா் பாதுகாப்பாக வெளியேறினா். ஆனால், தீ பரவி கடை முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிள், ஸ்கூட்டா் மீது பரவி எரிந்தது. கடை உரிமையாளா் பாலமுருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT