தஞ்சாவூர்

திருமலைசமுத்திரம் அரசுப் பள்ளியில் சாஸ்த்ரா சாா்பில் சுதந்திர தின விழா

17th Aug 2022 01:10 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 75 ஆவது சுதந்திர தின விழா அண்மையில் நடைபெற்றது.

இதையொட்டி, இப்பள்ளியில் நாட்டுப்பற்றுடன் கூடிய தலைப்புகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல் போன்றவை நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் தொடா் கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் துறைத் தலைவா் ஆா். சீனிவாசன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தேசியக் கொடியின் மதிப்பு, அதன் பயன்பாடு, சுதந்திர போராட்ட வீரா்களின் எண்ணற்ற தியாகங்கள் ஆகியவற்றை அனைத்து மாணவா்களுக்கும் எடுத்துரைக்கும் விதமாக இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக உன்னத் பாரத் அபியான், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சமூக விரிவாக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரெங்கராஜன், தியாகராஜன், விஜய் ஆனந்த் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT