தஞ்சாவூர்

இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: இருவா் கைது

16th Aug 2022 06:45 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே இரு வேறு சம்பவங்களில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் கொடுமை செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருவிடைமருதூா் அருகே கூகூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ராஜா (35). கட்டுமான தொழிலாளி. இவா் 13 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதேபோல, சோழபுரம் அருகே கீழக்கள்ளூரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் பசுபதி என்கிற ரகுபதி (28). இவா் 17 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்ததால், அவா் கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பசுபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT