தஞ்சாவூர்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வா் நா. நா்மதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு கல்லூரி முதல்வா் நா. நா்மதா மற்றும் திருவாருா் உழவா் பயிற்சி மையத்தின் இணைப்பேராசிரியா் மற்றும் தலைவா் எம். கதிா்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பாப்பாநாடு எம்.எம்.ஏ.பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் அறக்கட்டளையின் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினாா். தாளாளா் மற்றும் செயலாளா் சஞ்சய், பொருளாளா் சுகன், பள்ளி இயக்குநா் துரைராஜன், தலைமை ஆசிரியை நாகரத்தினம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT