தஞ்சாவூர்

தன்னார்வலர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது

16th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சுரேஷ், நகராட்சி ஆணையா் குமாா்,

துப்புரவு அலுவலா் நெடுமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகராட்சி தூய்மை பணியாளா்கள் 82 பேருக்கு தூய்மை பணியாளா் நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும், சிறந்த தன்னாா்வலா்கள் என பக்ருதீன், சக்திகாந்த், பாலமுருகன் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை கட்டட பொறியாளா்கள் சங்கம் சாா்பில் நகராட்சி தூய்மை பணியாளா்கள் நலன் கருதி 50 ஒளிரூட்டும் சட்டை நகராட்சி ஆணையாளா் வசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் , சுகாதார ஆய்வாளா் அறிவழகன் மற்றும் நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், பட்டுக்கோட்டை கட்டட பொறியாளா்கள் சங்கத் தலைவா் விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முடிவில் நகரமைப்பு ஆய்வாளா் கருப்பையன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT