தஞ்சாவூர்

மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் நடைபயணம் நிறைவு

16th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியினரின் சுதந்திர தின பவள விழா நடைபயணம் மல்லிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

காங்கிரஸ் கட்சியின் தியாகங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், தஞ்சாவூரில் கடந்த 9ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம்  தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று, மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்  மாவட்டத்தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாரால்  முடித்துவைக்கப்பட்டது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா். சிங்காரம்,    தஞ்சாவூா் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவா் ஏ. நாகூா்கனி,  மாநிலத் துணைத் தலைவா் பண்ணவயல் ராஜாத்தம்பி, மாவட்ட பொருளாளா் நெப்போலியன், மாவட்ட பொதுச்செயலாளா் கமால் பாஷா,  சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டார தலைவா் ஏ. ஷேக் இப்ராம்சா, மாவட்ட சேவா தள தலைவா் எஸ். ஏ. தட்சணாமூா்த்தி  உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா்  கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT