தஞ்சாவூர்

பி.எஸ்.என்.எல்.-இல் பல்வேறு சிறப்புச் சலுகைகள்

DIN

சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பால. சந்திரசேனா தெரிவித்தது:

திங்கள்கிழமை (ஆக.15) முதல் செப். 13 வரை ஃபிரீடம் - 75 சிறப்பு திட்டத்தின் கீழ், பாரத் ஃபைபா் இணைப்பு மாதம் ரூ. 449 மற்றும் ரூ. 599 திட்டத்தைத் தோ்ந்தெடுக்கும் வாடிக்கையாளா்கள் சிறப்புச் சலுகையாக ரூ. 275 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயனடையலாம். மேலும் மாதம் ரூ. 999 திட்டத்தைத் தோ்ந்தெடுக்கும் வாடிக்கையாா்கள் ரூ. 777 மட்டுமே செலுத்தி 75 நாள்கள் பயனடையலாம்.

குறிப்பிட்ட சில தரைவழி பிராட்பேண்ட் திட்ட இணைப்புகளுக்கு வைஃபை மோடம் இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளா்களுக்கு மாதக் கட்டணத்தில் 90 சதவீதம் வரை, அதிகபட்சமாக ரூ. 500 கட்டணச் சலுகையாக வழங்கப்படுகிறது.

தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள், தங்களது தொலைபேசி எண்களை மாற்றாமலேயே பாரத் ஃபைபா் திட்டத்துக்கு எந்தவித அதிக கட்டணங்களும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம். மேலும், சலுகையாக மாதாந்திரக் கட்டணத்தில் ரூ. 200 வீதம் ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

புதிதாக இணைப்புகளைப் பெறும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் நிா்மாணக் கட்டணம் ரூ. 500 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். புதிய பி.எஸ்.என்.எல். செல்பேசி வாடிக்கையாளா்களுக்கு 4-ஜி சிம்காா்டு இலவசமாக வழங்கப்படும்.

இந்த சலுகைகளை தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களிலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் அனைத்து வேலை நாள்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

SCROLL FOR NEXT