தஞ்சாவூர்

லடாக்கிற்கு இரு இளைஞர்கள் சைக்கிள் பயணம்: வழியனுப்பிய தஞ்சை மக்கள்

15th Aug 2022 12:39 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு லடாக்கிற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இரண்டு இளைஞர்களை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்தவர் அப்துல் ஹமீத். இவர் பி.ஏ. இளங்கலை பட்டம் பெற்றவர். மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஹித். இவர் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சுதந்திர நாளை போற்றும் வகையிலும், மத நல்லிணக்கத்தை பேணிக் காக்கவும், சைக்கிள் பயணத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இன்று அதிராம்பட்டினம் கிழக்குக்கிடக்கரை சாலையில் இருந்து லடாக் நோக்கி சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

முன்னதாக அதிராம்பட்டினம் நகராட்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடி வழியனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT