தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட  தேசியக் கொடி

15th Aug 2022 01:01 PM

ADVERTISEMENT

கும்பகோணம்: கும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கும்பகோணம்: நாட்டின் 75-வது சுதந்திர நாளை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றினார்.  

அப்போது தேசியக் கொடி  மேலே ஏற்றப்பட்ட பிறகு தான் கொடி தலைகீழாக இருப்பதை அறிந்தனர். உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி அவசர அவசரமாக சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது. 

இதையும் படிக்க: கொம்பன்குளம் அரசுப்பள்ளியில் தேசியக் கொடியேற்றிய 100 வயது மூதாட்டி!

ADVERTISEMENT

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.  சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT