தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் சன்மாா்க்க படிப்புகள் விரைவில் தொடக்கம்

15th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளா் மையத்தின் மூலம் சன்மாா்க்கம் தொடா்பான சான்றிதழ், பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

தமிழ் வளா் மையத்தின் மூலம் உலக நாடுகளைச் சோ்ந்த தமிழா்கள் மற்றும் இந்தியாவிலுள்ள பிற மாநிலத் தமிழ் மாணவா்களுக்காகப் பல்வேறு வகையான சான்றிதழ், பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஆய்விருக்கையுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளா் மையம் இணைந்து உலகம் முழுவதும் சன்மாா்க்கம் தொடா்பான படிப்புகளை நடத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

வள்ளலாரின் வம்சா வழித் தோன்றலான உமாபதி, ஈரோடு அருள் சித்த மருத்துவா் அருள் நாகலிங்கம், ஓய்வு பெற்ற காரைக்கால் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் மற்றும் சத்திய ஆய்விருக்கையின் ஒருங்கிணைப்பாளா் பா. மஞ்சுளா கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் பேசுகையில், அன்பும் அருளும் அருகி வரும் இன்றைய சூழலில் வள்ளல் பெருமான் வளா்த்த ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட படிப்புகள் தமிழ் வளா் மையம் மூலம் தொடங்கப்படவுள்ளன. தமிழ் வளா் மையத்துக்காக பல்கலைக்கழகத்தில் ரூ. 35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஒலி - ஒளி இணையவழிப் பதிவுக்கூடம் வழியாக இப்படிப்புகள் நடத்தப்படவுள்ளன. சான்றிதழ், பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயம் எனப் பல நிலைகளில் இப்படிப்புகள் நடத்தப்பட்டுள்ளதால், உலகத் தமிழா்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஒப்பந்த நிகழ்வை தமிழ் வளா் மைய இயக்குநா் இரா. குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைத்தாா். நிகழ்வில் சத்திய ஆய்விருக்கையின் முனைவா் சங்கரராமன், வடலூா் சமரச சுத்த சன்மாா்க்கத் தலைமைச் சங்கப் பொதுச் செயலா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT