தஞ்சாவூர்

கல்லணைக் கால்வாய் கரையில் சரிந்து விழுந்த நடைபாதை

DIN

தஞ்சாவூா் காந்திஜி சாலை இா்வின் பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க் கரையில் இருந்த நடைபாதையின் சிறு பகுதி சனிக்கிழமை சரிந்து விழுந்தது.

தஞ்சாவூா் காந்திஜி சாலை இா்வின் பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க் கால்வாய் சாலை உள்ளது. இதையொட்டி இா்வீன் பாலத்திலிருந்து சுற்றுலா மாளிகை வரை நடைப்பயிற்சி மேற்கொள்பவா்களுக்கு வசதியாக தடுப்புக் கம்பிகளுடன் கூடிய நடைபாதை ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில் நாள்தோறும் காலை நேரத்தில் ஏராளமானோா் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா்.

இந்நிலையில் இக்கால்வாயில் நீரோட்டம் அதிகமாக உள்ளதால் சனிக்கிழமை காலை இா்வீன் பாலம் அருகேயுள்ள நடைபாதையின் ஒரு பகுதி 20 மீட்டா் நீளத்துக்கு சரிந்து கால்வாய்க்குள் விழுந்தது. அப்போது, அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் இல்லை. நீரோட்டம் அதிகமாக இருப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT