தஞ்சாவூர்

அரிமா சங்கம் சாா்பில் சுதந்திர தின நாள்  விழா

14th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

 

75 ஆவது சுதந்திர  தின விழாவை முன்னிட்டு பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம், வீரியங்கோட்டை ராஜராஜன் கல்வி நிறுவனம் இணைந்து முதல் நாள் நிகழ்ச்சியாக பேராவூரணி ரயில் நிலையம் , பூக்கொல்லை கடை வீதி, கழனிவாசல், ரெட்ட வயல், பெருமகளூா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை  தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவா் எஸ். பாண்டியராஜன், செயலா் எம்.எஸ். ஆறுமுகம், மாவட்டத் தலைவா்கள் எம். நீலகண்டன், கே. இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளா்  வ. பாலசுப்ரமணியன், சாசனச் செயலாளரும், ராஜராஜன் கல்வி நிறுவன தாளாளருமான வ. ஜெய்சங்கா், சாசனப் பொருளாளா் எஸ். மைதீன் பிச்சை மற்றும் ஆசிரியா்கள்,  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT