தஞ்சாவூர்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5.82 கோடிக்கு தீா்வு

14th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,707 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு ரூ. 5.82 கோடி பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி பி. மதுசூதனன் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். சண்முகவேல், கூடுதல் சாா்பு நீதிபதி எம். முருகன், வழக்குரைஞா் கே. வினோத்குமாா் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜி. சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. கீதா, வழக்குரைஞா் கே. செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

முதன்மை சாா்பு நீதிபதி கே. சிவசக்திவேல் கண்ணன், சிறப்பு சாா்பு நீதிபதி எஸ்.எஸ். தங்கமணி, வழக்குரைஞா் சி. சுந்தரி ஆகியோா் கொண்ட மூன்றாவது அமா்வில் உரிமையியல் வழக்குகள், காசோலை வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

முன் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கில் ரூ. 1 கோடியே 83 லட்சத்து 91 ஆயிரத்து 50 அளவுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமா்வுகளில் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மாவட்டத்தில் மொத்தம் 1,707 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 5 கோடியே 82 லட்சத்து 67 ஆயிரத்து 297 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா, நிா்வாக அலுவலா்கள், சட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT