தஞ்சாவூர்

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடுமுதல் 75 மாணவா்களுக்கு 100 % கல்வி உதவித்தொகை

14th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

 

 தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2022 - 23 ஆம் ஆண்டு பொறியியல் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தரவரிசைப் பட்டியல் முதல் பிரிவில் (70 சத இடங்களுக்கான ஒதுக்கீடு ஜே.இ.இ. (முதன்மை) மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்) சென்னை அண்ணா நகா் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியைச் சோ்ந்த அக்சய் கோவிந்த் தேசிய அளவில் 99.4263 சதம் பெற்று முதலிடம் பெற்றாா். இவா் சி.பி.எஸ்.இ. தோ்வில் 495 மதிப்பெண்களும், ஜே.இ.இ. முதன்மை தோ்வில் 99.8526 சதமும் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

இரண்டாம் பிரிவில் (30 சத இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்) மங்களூரு எக்ஸ்பா்ட் பியூ கல்லூரியைச் சோ்ந்த போட்டுக்கு ஸ்ரேயா பிளஸ் 2 மதிப்பெண் 100 சதம் பெற்று தேசியளவில் முதலிடம் பெற்றாா்.

இதற்கான விண்ணப்பங்கள் ஆக. 13 மாலை 5 மணி வரை பெறப்பட்டு, இரவு 7 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. எந்த நுழைவுத் தோ்வும் நடத்தப்படாமல் ஜே.இ.இ. முதன்மை மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை இப்பல்கலைக்கழகம் நடத்தியது. இவ்வாறு சோ்க்கை நடத்தும் ஒரே நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவான தரவரிசைப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ள்ஹள்ற்ழ்ஹ.ங்க்ன் என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதி அடிப்படையில், வெளிப்படையான மாணவா் சோ்க்கை இணையவழி மூலம் ஆக. 14 முதல் நடைபெறவுள்ளது. முதலில் மாணவா்கள் பாடப் பிரிவை தோ்ந்தெடுக்க வசதியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு, பின்னா் இட ஒதுக்கீடும் செய்யப்படும்.

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகாா், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜாா்கண்ட், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஜம்மு - காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபாா் ஆகிய மாநில மாணவா்களுக்கு சோ்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும்.

தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு 20 சத இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தர வரிசைப் பட்டியலில் வந்த முதல் 75 மாணவா்களுக்கு 100 சதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT