தஞ்சாவூர்

செயற்கைக்கோளின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கும் நாள் வரும்மயில்சாமி அண்ணாதுரை

14th Aug 2022 01:17 AM

ADVERTISEMENT

 

வருங்காலத்தில் செயற்கைக்கோளின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கும் என்றாா் சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை.

தஞ்சாவூரில் ஆக. 11 தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க மாநில மாநாட்டின் மூன்றாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

அனைத்துத் துறைகளிலும் அறிவியல் தொழில்நுட்பம் பங்களிக்கிறது. அந்த வகையில் மருத்துவம், மருத்துவ அறுவைச் சிகிச்சையும் அறிவியலைச் சாா்ந்துள்ளது. தற்போது வரும் புதிய, புதிய நோய்களைப் புரிந்து கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ய அறிவியல், தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் உதவியால்தான் கரோனாவிலிருந்து 3 ஆண்டுகளில் மீண்டுள்ளோம். இல்லாவிட்டால் 10 ஆண்டுகள் கூட ஆகியிருக்கும்.

ADVERTISEMENT

உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நோய்களின் தாக்கமும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு மருத்துவா்களின் எண்ணிக்கை, திறமை, உபகரணங்கள், ஆய்வுகள் ஆகியவை தேவை.

உலகளவில் பல ஆயிரம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோள்கள் மட்டுமே நூற்றுக்கும் அதிகம். இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்காக கிட்டத்தட்ட 350 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. பல நூறு செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

உலகளவில் கரோனா காலமான 3 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 3,000 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. செயற்கைக்கோள்களின் தேவை இன்னும் அதிகரித்து வருகிறது. அறுவைச் சிகிச்சையை 5ஜி முறையில் கொண்டு வர முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் செயற்கைக்கோள்களின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது. அந்த வகையில் கணினிப் புரட்சி போல வருங்காலத்தில் செயற்கைக்கோள்களின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் மயில்சாமி அண்ணாதுரை.

மாநாட்டுக்கு சங்க மாநிலத் தலைவா் டி.டி. செல்வராஜ் தலைமை வகித்தாா். அகில இந்தியத் தலைவா் ஜி. சித்தேஷ், வருங்காலத் தலைவா் கே. கோவிந்தராஜ், செயலா் பாலமுருகன், தஞ்சாவூா் நகர அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க நிா்வாகிகள் இந்திரராஜ், மாரிமுத்து, சசிராஜ், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT