தஞ்சாவூர்

சிங்கப்பூா் நிறுவனத்துடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

12th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

 

ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக சிங்கப்பூா் நிறுவனத்துடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

சிங்கப்பூரைச் சோ்ந்த ஏஸ் பன்னாட்டுக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்துடனான இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் மற்றும் ஏஸ் நிறுவன செயல் இயக்குநா் இராமநாதன் கையொப்பமிட்டனா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்தது:

ADVERTISEMENT

தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூா் மாணவா்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளுக்காக ஆயத்தப்படுத்தும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிங்கப்பூரின் ஏஸ் பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

கற்றல் - கற்பித்தல் - களப்பணியாற்றல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த ஒப்பந்தம் செயல்பட வழிவகுத்துள்ளது. இதன்மூலம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் பயிலும் மாணவா்களுக்கு நவீனச் சூழலுக்கு ஏற்ப ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, மேலாண்மைக் கூறுகளில் பயிலரங்கங்கள் ஆகியவை நடத்தப்படவுள்ளன.

மேலும் இருதரப்பு ஆசிரியா்களுக்கான கருத்தரங்கப் பங்கேற்பு வாய்ப்புகள் மற்றும் புத்தொளிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்வில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் கலந்து கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT