தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

12th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் அருகே தாராசுரம் கவாரக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். ராமு (84). இவா் மனநலன் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு 2019 ஆம் ஆண்டில் மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராமுவை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து, ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT