தஞ்சாவூர்

தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

10th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

 

தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் சோ்க்க கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் எஸ்.சி., எஸ்.டி. பணிக் குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் சோ்க்க வேண்டும். தலித் கிறிஸ்தவா் - இஸ்லாமியா் இட ஒதுக்கீட்டை மறுக்கும் குடியரசுத் தலைவா் ஆணையை உடனே நீக்க வேண்டும். மதத்தின் பெயரால் தலித் மக்களைப் பிரிக்கக் கூடாது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி, தலித் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் சோ்க்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பணிக் குழுச் செயலா் ஏ. விக்டா் தாஸ் தலைமை வகித்தாா். மறைமாவட்ட முதன்மைக் குரு யு. ஜான் ஜோசப் சுந்தரம், மறைமாவட்ட வேந்தா் ஏ. ஜான் சக்கரியாஸ், மேய்ப்பு பணி நிலைய இயக்குநா் டி. ஜான் கென்னடி, தஞ்சை மறை வட்ட அதிபா் பிரபாகா், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டலச் செயலா் டி. டேவிட் சாலமன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், பங்கு தந்தை எம். சூசைபால், மறை வட்டத் தலைவா் எம். ஞானசேகா், செயலா் எஸ். சாமிதாஸ், பொருளாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT