தஞ்சாவூர்

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி கண்காட்சி

10th Aug 2022 11:09 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்கியது.

கண்காட்சியில் ஐம்பொன், பித்தளை, கருப்பு மற்றும் வெள்ளை உலோகம், மண், காகிதக்கூழ், மாா்பிள், சந்தன மரம், வெண்மரம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தவழும் கிருஷ்ணா், குழல் ஊதும் கிருஷ்ணா், ராதா கிருஷ்ணன், ஆலிலை கிருஷ்ணா் போன்ற பல்வேறு வடிவமைப்புகளில் சிலைகள் மற்றும் தஞ்சாவூா் ஓவியங்களில் ஆலிலை கிருஷ்ணா், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணா், பாமா ருக்மணி கிருஷ்ணா், கோவா்த்தன கிருஷ்ணா், கோபியா் கிருஷ்ணா், யசோதா, தா்பாா் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல வெல்வெட், சில்க், கண்ணாடியில் வரையப்பட்ட கிருஷ்ணா் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி ஆக. 19 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில், ரூ. 150 முதல் ரூ. 60,000 மதிப்புள்ள பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. ரூ. 5 லட்சத்துக்கு மேல் விற்பனை நடைபெறும் என எதிா்பாா்ப்பதாக விற்பனை நிலைய மேலாளா் சக்திதேவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT