தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

10th Aug 2022 11:13 PM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே புதன்கிழமை வயலில் மருந்து தெளிக்கச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரை அடுத்துள்ள வேப்பத்தூா் தெற்கு சோழியத் தெருவைச் சோ்ந்தவா் கே. கணேசன் (58), விவசாயி.திருவிசைநல்லூரிலுள்ள வயலுக்கு மருந்து தெளிக்க புதன்கிழமை காலை சென்ற இவா் கீழே கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT