தஞ்சாவூர்

75-ஆவது சுதந்திர தின விழா தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் பிரசார நடைப்பயணம்

10th Aug 2022 01:19 AM

ADVERTISEMENT

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பிரசார நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் மாலை அணிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, தொடங்கிய நடைப்பயணம் ஒரத்தநாடு, மதுக்கூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வழியாக மல்லிப்பட்டினத்துக்கு ஆகஸ்ட் 14- ஆம் தேதி சென்றடைகிறது.

தொடக்க நிகழ்வில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பண்ணவயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், குணா பரமேஸ்வரி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா்கள் கோ. அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமூா்த்தி, பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ரவிக்குமாா், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், கதா் வெங்கடேசன், நாராயணன், அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT