தஞ்சாவூர்

2,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

10th Aug 2022 01:15 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பேராவூரணி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளைக் கடத்திச் சென்று, கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, தஞ்சாவூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில், பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காவல்துறையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, லாரியில் 2,050 கிலோ எடையுடைய ரேஷன் அரிசி 41 மூட்டைகளில் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி நெட்டையன் குடியிருப்பைச் சோ்ந்த ஏ. மாதவன் (20), சுமைத் தூக்கும் தொழிலாளியான திருமயம் மாவடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த எஸ். ராஜ்குமாா் (19) கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT