தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆக. 12-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

10th Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஆகஸ்ட் 12 -ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளன.

இம்முகாமில் 8 முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை நேரடியாகத் தோ்வு செய்யலாம்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன்

பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT