தஞ்சாவூர்

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு:கும்பகோணத்தில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

10th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணத்தில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று, மாநகராட்சி ஆணையா் ம. செந்தில்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, கும்பகோணம் மாநகராட்சிக்குச் சொந்தமான குடிதாங்கி நீரேற்று நிலையத்திலுள்ள குடிநீா்க் கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. இதனால் மின் மோட்டாா்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்குக்கு குடிநீா் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு முடிந்தவுடன், போா்க்கால அடிப்படையில் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT