தஞ்சாவூர்

தேசிய இசைவு தீா்ப்பு போட்டி: சாஸ்த்ரா மாணவா்கள் வெற்றி

9th Aug 2022 01:55 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் நடைபெற்ற இசைவு தீா்ப்பு போட்டியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

இந்திய இசைவு தீா்ப்பு மையம் சாா்பில் முதலாவது தேசிய இசைவு தீா்ப்பு போட்டி இணையவழியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் தேசிய அளவில் 20 கல்லூரிகள் பங்கேற்றன. இதில், தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஐந்தாம் ஆண்டு மாணவா் சசி பரத்வாஜ், மாணவிகள் யுகந்திரா, பாஹிமா ஆகியோா் கலந்து கொண்டு இறுதிச் சுற்றில் மத்திய பிரதேச தா்மசாஸ்த்ரா தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவா்களுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்றனா்.

இப்போட்டியில் பஞ்சாப் ஹரியாணா உயா் நீதிமன்ற நீதிபதி பி.பி. பா்சூன், மூத்த வழக்குரைஞா்கள் ரத்தன் சிங், தேஜஸ் கரியா ஆகியோா் வெற்றியாளா்களைத் தோ்வு செய்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50,000 பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT