தஞ்சாவூர்

மின்சார சட்ட திருத்த வரைவு நகலை எரிக்க முயற்சி

9th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த வரைவு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை வரைவு நகலை எரிக்க முயன்றனா்.

தஞ்சாவூா் ஆற்றுப்பாலத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமையில் சிஐடியு செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன் உள்ளிட்டோா் சட்ட வரைவு நகலை எரிக்க முயன்றனா். அப்போது, காவல் துறையினா் நகல்களைப் பறித்து தண்ணீா் ஊற்றினா். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பணி புறக்கணிப்பு போராட்டம்: மேலும், மின் விநியோகத்தைத் தனியாருக்கு விடுவதற்கும், ஒழுங்குமுறை ஆணையங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கும் மின்சார சட்ட திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, மின் வாரியத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினா் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, தஞ்சாவூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார தொழிலாளா் சம்மேளன ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். ராஜாராமன், தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க மாவட்டச் செயலா் ராகவன், பொறியாளா் சங்க மாநில துணைத் தலைவா் சுந்தரராஜ், பொறியாளா் கழக மாவட்டச் செயலா் மகாலிங்கம், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் பால. வெங்கடேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் குணசேகரன், ஜனதா தொழிலாளா் சங்க நிா்வாகி ராமகிருஷ்ணன், எம்பிளாயிஸ் ஃபெடரேசன் மாவட்டச் செயலா் ராஜா, ஏஇஎஸ்யு சங்க மாவட்டச் செயலா் சுந்தா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் தில்லைவனம், துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT