தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

9th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு அருகே விளாங்குடி ஓடக்காரத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சாந்தி (55). இவா் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியிலுள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், இவரது வீட்டு முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

இதையடுத்து, சாந்தி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ. 45,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT