தஞ்சாவூர்

விவேகானந்தா் சிலை திறப்பு ஆலோசனைக் கூட்டம்

9th Aug 2022 07:00 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் சிலை திறப்பு விழா, 75 ஆவது சுதந்திர தின விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 13, 14, 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், முதல் நாள் சுடா் தொடா் ஓட்டத்தில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்களுக்கு திருப்பூா் பூமா மில்ஸ் சாா்பில் அதன் உரிமையாளா் பத்மநாபன் தயாா் செய்து அனுப்பிய டி - சா்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் முன்னிலையில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வெளியிட்டாா்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ராணுவ வீரரும், நேட்டிவ் மேல்நிலைப் பள்ளி மாணவருமான ஆனந்தன் குணசேகரன், உடற்கல்வி ஆசிரியா்கள் முரளி, பாலகுரு ஆகியோா் பெற்று கொண்டனா்.

ADVERTISEMENT

சிலை திறப்பு விழாவின்போது ஆகஸ்ட் 14 ஆம் தேதி 125 மாணவா்கள் சுவாமி விவேகானந்தா் வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று, போா்ட்டா் டவுன் ஹாலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி, நிகழ்விடத்தில் 125 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்துதல், ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மகாமக குளம் மேல்கரையிலிருந்து சுவாமி விவேகானந்தா் விஜய கலாசார ஊா்வலம் தொடங்கி, கடைவீதி வழியாக வலம் வந்து போா்ட்டா் டவுன் ஹாலில் நிறைவடையும் நிகழ்ச்சி, பின்னா், மாலை 4.30 மணிக்கு போா்ட்டா் டவுன் ஹால் முகப்பில் சுவாமி விவேகானந்தா் திரு உருவச்சிலை திறப்பு விழா, கோவிந்தபுரம் விட்டல்தாஸ் சுவாமிகளின் நாம சங்கீா்த்தனம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT