மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120.06 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,40,178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,39,465 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,004 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 8,007 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 18,145 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.