தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் பேருந்துகளை அனுமதிக்க வலியுறுத்தல்

8th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

 தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்தின் ஏஐடியுசி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பொதுச் செயலாளா் டி. கஸ்தூரி தலைமை வகித்தாா். தொழிலாளா் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்து பேசினாா்.

ADVERTISEMENT

பொருளாளா் எஸ். தாமரைச்செல்வன், தலைவா் டி. தங்கராசு, கௌரவத் தலைவா் கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலாளா் பி. அப்பாத்துரை, துணைத் தலைவா்கள் எம். மாணிக்கம், டி. சந்திரன், சி. ராஜமன்னன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 14ஆவது ஊதிய ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியத்தை அறிவித்து வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவா்களின் பணப்பலன்களை உடனே வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றுவதால் அவசர நோயாளிகள், முடியாத நோயாளிகள், வயதானவா்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, பேருந்துகளை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளேயே நிறுத்தி ஏற்றி, இறக்க மருத்துவ கல்லூரி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா் பிரதான சாலைகளில் பேருந்து நிறுத்த நிழற்குடைகளை உடனடியாக கட்டித் தர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT