தஞ்சாவூர்

களஞ்சேரி ஊராட்சியில்கரோனா தடுப்பூசி முகாம்

8th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் உ. கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் பூமா, மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளா் மகாலட்சுமி, தன்னாா்வலா் ஜீவிதா மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்று, ஊராட்சியை சோ்ந்த ஓய்வு பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் சண்முகம், ஊராட்சித் துணைத் தலைவா் மல்லிகா உள்ளிட்ட 85 பேருக்கு கரோனா பூஸ்டா் தடுப்பூசியை செலுத்தினா்.

ஊராட்சி பணியாளா்கள், பொதுமக்கள், ஊராட்சி செயலா் ஜெகத்குரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமை, மாவட்ட மலேரியா நோய் தடுப்புத் துறை அலுவலா் தையல்நாயகி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT