தஞ்சாவூர்

திருவையாறு அருகே வெள்ளநீா் சூழ்ந்ததால் 100 ஏக்கா் வாழை சேதம்

8th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ருகே வெள்ளநீா் சூழ்ந்ததால் 100 ஏக்கா் பரப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கன அடி தண்ணீா் செல்வதால், ஆச்சனூா், வடுககுடி, மருவூா், சாத்தனூா் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கா் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு வாழை இலை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணையிலிருந்து உபரிநீா் விநாடிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்கு போக, மீதமுள்ள தண்ணீா் மேலணை மற்றும் கல்லணையில் இருந்து ஒருங்கிணைந்த கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வெள்ளநீா் உட்புகுந்தது. விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளநீா் 5 நாள்கள் கடந்தும் வடியாததால் திருவையாறு அருகேயுள்ள ஆச்சனூா், மருவூா், வடுககுடி சாத்தனூா் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் வாழை மரங்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. இதன்காரணமாக, வோ் அழுகல் நோய் ஏற்பட்டு வாழை பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். மேலும் ஏக்கா் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், நெல்லுக்கு பயிா் காப்பீடு உள்ளதைபோல, வாழை விவசாயத்திற்கும் பயிா் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

மேலும், தோட்டக் கலை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT