தஞ்சாவூர்

மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி உயிரைகாப்பாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டு

8th Aug 2022 12:34 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மண்ணில் புதைந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம் அருகே சின்னமனை கிராமத்தில், கழிவுநீா் தொட்டிக்காக சிமெண்ட் உறை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சித்திரவேல் (45) என்ற கூலித் தொழிலாளி, 15 அடி ஆழத்தில் மண்ணில் முழுவதுமாக புதைந்தாா். 

அவரை, பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிராம மக்கள் உதவியுடன், ஒன்றரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா். மிகவும் ஆபத்தான சூழலில்  தொழிலாளியை உயிருடன் மீட்ட பேராவூரணி தீயணைப்பு  துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தேசிய எலும்பு மூட்டு தினத்தையொட்டி எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவா்  துரை. நீலகண்டன், சமூக ஆா்வலா் மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் ஆகியோா் தீயணைப்பு நிலைய அலுவலா்  ராமச்சந்திரன், தீயணைப்பு வீரா்கள் சுப்பையன், நீலகண்டன், ரஜினி, ராஜீவ் காந்தி, மகேந்திரன், சரவணமூா்த்தி உள்ளிட்ட வீரா்களுக்கு, சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT