தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

8th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தஞ்சை ரயிலடியிலிருந்து மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலமாக புறப்பட்டு, கலைஞா் அறிவாலயம் வந்து அங்குள்ள கருணாநிதி சிலை, படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்வில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா் உபயதுல்லா, மாவட்ட பொருளாளா் எல்.ஜி. அண்ணா, மாநகராட்சி மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் அண்ணா சிலை பகுதியிலிருந்து தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏனாதி ப. பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுகவினா் அமைதி ஊா்வலமாக தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் வந்து அங்கு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் எஸ் ஆா்என். செந்தில்குமாா், ஆா். இளங்கோ, வி. கோவிந்தராஜூ, என்.பி. பாா்த்திபன், பா. ராமநாதன், ஆா்.பி. முருகானந்தம், எஸ். சத்தியவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ். சண்முகப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT