தஞ்சாவூர்

‘ஒப்பந்த முறை பணி நியமனம் கண்டனத்துக்குரியது’

6th Aug 2022 11:59 PM

ADVERTISEMENT

 

 10 ஆண்டுகள் பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்குவோம் என்றனா். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒப்பந்த முறையில் பணி நியமனங்கள் நடைபெறுவது கண்டனத்துக்குரியது என்றாா் சிஐடியு தமிழ் மாநிலக் குழு பொதுச் செயலா் ஜி. சுகுமாறன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க 30-ஆவது மாநில மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. சத்தியநாராயணன் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் ஜி. சுகுமாறன் மேலும் பேசியது:

ADVERTISEMENT

தமிழக அரசு 80 சதத் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறது. எஞ்சிய வாக்குறுதிகள்தான் நமது பிரச்னை. மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரமாக்குவோம் என்றனா். ஆனால், இப்போது தமிழகத்தில் பணி நியமனங்கள் ஒப்பந்த முறையில் நடைபெறுவது கண்டனத்துக்குரியது.

ஆசிரியா், மருத்துவப் பணியாளா்கள் எல்லாமே ஒப்பந்த முறை என்பது தான் தற்போதைய நிலை.

மத்தியில் ஆளக்கூடிய பாஜகவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கிறது. அது இன்றைய தொழிலாளா்களின் நலன்களுக்குத் தேவை. ஆகவே பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்த பல மாநில அரசுகள் தேவை. அதில் திமுக அரசு முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.

மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT