தஞ்சாவூர்

பாபநாசத்தில் மீட்பு உபகரணங்கள் தயாா்

6th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

 

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளா்கள் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

பாபநாசம் நிலைய அலுவலா் இளங்கோவன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் தொடா்ந்து கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா். மேலும் வலுவிழந்த கரைப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு சவுக்கு கம்புகளும் மணல் மூட்டைகளும் தயாா் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT