தஞ்சாவூா், பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1,500 மதுப்பாட்டில்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு புகாா் வந்தது.
இதன்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், தலைமைக் காவலா்கள் உமாசங்கா், ராஜேஷ், காவலா்கள் அருள்மொழிவா்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோா் தஞ்சாவூா், துறையூா், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களிலும், துறையூரிலுள்ள பெட்டிக்கடையிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
இவற்றில் அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1,000 பீா், பிராந்தி பாட்டில்களும், 500 குவாட்டா் பாட்டில்களும், ரூ. 30,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை பன்னீா்செல்வம் (50), முதல்சேரி பாலுசாமி (47), ஒரத்தநாடு ரமேஷ் (46), தஞ்சாவூா் கீழவாசல் மணிகண்டன் (30), பாலோபநந்தவனம் தமிழரசன் (28) ஆகிய 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.