தஞ்சாவூர்

கும்பகோணம் மருந்துக் கடைக்கு சீல் வைப்பு

2nd Aug 2022 02:31 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் கூரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பியதால் கோவை மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தொடா்புடைய மருந்துக் கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கும்பகோணம் ஹாஜியாா் தெருவில் மருந்துக் கடை நடத்தி வருபவா் முகமது பஷீா் (48). கோவையில் கல்லூரி மாணவா் போதை மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், இந்த மாத்திரைகளை முகமது பஷீா் கூரியா் மூலம் அனுப்பி வந்ததும் தனிப்படை காவலா்களின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, முகமது பஷீரை காவல் துறையினா் ஜூலை 16 ஆம் தேதி கைது செய்தனா்.

ஆனால், அவரது மருந்துக் கடை தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி செவ்வாய்க்கிழமை (ஆக.2) ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான குழுவினா், காவல் துறையினா் முன்னிலையில் இக்கடையை திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT