தஞ்சாவூர்

சிலம்பப் போட்டி: பட்டுக்கோட்டைமாணவ, மாணவிகள் முதலிடம்

30th Apr 2022 12:29 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பட்டுக்கோட்டை மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

கள்ளக்குறிச்சியில் அண்மையில் சிலம்பப் போட்டிகள் மாநில அளவில் நடைபெற்றன. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஸ்பெஷல் போா்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோ சிலம்பம் கலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 போ் பங்கேற்றனா். இவா்களை பயிற்சியாளா் வி.ஆா்.செல்வம் அழைத்துச் சென்றாா்.

இப்போட்டியில் பட்டுக்கோட்டை மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்று, பரிசுகளைக் கைப்பற்றினா். இவா்களை பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் சுரேஷ் பாராட்டினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT