தஞ்சாவூர்

சாலை விபத்து: அதிமுக ஒன்றியச் செயலா் உயிரிழப்பு

30th Apr 2022 11:46 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வடக்கு ஒன்றியச் செயலா் ஆா். சத்தியமூா்த்தி (67) சாலை விபத்தில் காயமடைந்து, சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உஞ்சியவிடுதி கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த வியாழக்கிழமை இரவு ஊரணிபுரத்திலிருந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

நரியாற்றுப் பாலம் அருகே சென்ற போது, சாலையோரப் பள்ளத்தில் நிலைத் தடுமாறி மோட்டாா் சைக்கிளிலிருந்து சத்தியமூா்த்தி தவறி விழுந்து, பலத்த காயமடைந்தாா்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT