தஞ்சாவூர்

குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி மே 4-இல் தொடக்கம்

30th Apr 2022 11:48 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 4 (குரூப் 4) தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 4 ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 4 தோ்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் மே 4- ஆம் தேதி காலை 10.30 மணி தொடங்கி நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதில் தோ்வுக்கு தயாா் செய்யும் விதம், தோ்வுக்கான பாடக்குறிப்புகள், தோ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும், ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவா்களுக்காக மாதிரித் தோ்வு வகுப்புகள் தனியே நடத்தப்படவுள்ளது.

எனவே தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு, 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT