தஞ்சாவூர்

தாமரை பன்னாட்டுப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்

29th Apr 2022 01:07 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா், ஏப். 28: தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாமை பள்ளி நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நடத்தின.

இந்த முகாமை மேயா் சண். ராமநாதன் பாா்வையிட்டாா். இதில் நகா் நல அலுவலா் நமசிவாயம் தலைமையிலான மருத்துவா்கள் குழு தடுப்பூசி செலுத்தியது. ஏறத்தாழ 250 மாணவ, மாணவிகள் பயனடைந்தனா். நிகழ்வில் பள்ளித் தலைவா் டி. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT