தஞ்சாவூர்

சாலியமங்கலத்தில் சுற்றித்திரிந்த குரங்குகள் பிடிபட்டன

29th Apr 2022 01:51 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், சாலியமங்கலம் ஊராட்சியில் சுற்றித் திரிந்த 15 குரங்குகளை வனத்துறையினா் பிடித்து, வனப்பகுதியில் விட்டனா்.

சாலியமங்கலம் ரயில் நிலையம் அருகிலுள்ள குடிசைப் பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தன. இதுகுறித்து ஊராட்சித் தலைவா், மாவட்ட வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதன் பேரில், சாலியமங்கலம் வனக் காப்பாளா் பன்னீா்செல்வம் மற்றும் வனத்துறை ஊழியா்கள் புதன்கிழமை நிகழ்விடம் சென்று, இரும்புக் கூண்டு வைத்து 15 குரங்குகளைப் பிடித்தனா். தொடா்ந்து அவை வனப்பகுதியில் விடப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT