தஞ்சாவூர்

இரும்புப் பொருளைத் திருடியவா் கைது

29th Apr 2022 01:51 AM

ADVERTISEMENT

பாபநாசம் பகுதியில் இரும்புப் பொருளைத் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம்- சாலியமங்கலம் பிரதான சாலையில் வசித்து வருபவா் முருகேசன் (60). இவரது வீட்டின் மாடிப் பகுதியில் இரும்புப் பொருள்(ராடு) இருந்ததை கண்ட இளைஞா் ஒருவா், அதை திருடிச் சென்றாா்.

இதை கண்ட அப்பகுதியினா் அவரைப் பிடித்து, பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவா் கும்பகோணம் வட்டம், தாராசுரம் காா்த்திக் (26) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து பாபநாசம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, காா்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT